என் மனைவியிடம் ஏன் பேசுகிறாய்...? நூதன திருட்டில் ஈடுபட்ட கும்பல்

 

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவராமன் (28) என்பவர் வில்லிவாக்கத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று அவர் ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு அருகில் இருந்த டாஸ்மாக்கை பார்த்த அவர் மது அருந்துவதற்காக உள்ளே சென்றார். அதன்பின் அங்கிருந்து வெளியே வந்த அவர் கோவிலின் அருகே நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

அப்போது திடீரென 2 மர்ம நபர்கள் அங்கு வந்து என் மனைவியிடம் எதற்காக பேசுகிறாய்? என்று கேள்வி கேட்டதுடன் பிளேடை வைத்து அவரது முகத்தில் கீரினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.3500 மற்றும் செல்போனையும் பறித்து சென்றனர்.இதைத்தொடர்ந்து சிவராமன் இச்சம்பவத்தை பற்றி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கி உள்ள மகாலட்சுமி, சந்தியா, ராஜேஷ் மற்றும் சேட்டா என்பது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் இவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு தனியாக வரும் நபர்களை இதுபோன்று ஏமாற்றி பணம் மற்றும் நகை கொள்ளை அடித்து வருவது தெரியவந்தது.

இவ்வாறு தனியாக வரும் ஆண்களிடம் பேச்சு கொடுப்பதும் பின்னர் வரும் ஒருவர் தான் அந்த பெண்ணின் கணவர் என் மனைவியிடம் ஏன் பேசுகிறாய்..?என்று நாடகத்தை அரங்கேற்றி நூதன திருட்டில் ஈடுபட்டுவந்துள்ளார்கள். இதில் சிக்குபவர்கள் பெண்கள் தொடர்பான விஷயம் வெளியில் தெரிந்தால் அவமானம் என யாரும் புகார் கொடுக்கவில்லை. இதை அந்த கும்பல் சாதகமாக பயன்படுத்தி வந்துள்ளது.

மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்தியா மற்றும் சேட்டாவை கைது செய்ததுடன் தலைமறைவாகியுள்ள ராஜேஷ் மற்றும் மகாலட்சுமியை தேடி வருகின்றனர்.

Post a Comment

0 Comments