திருப்போரூர் ஒன்றியம் புதுப்பாக்கம் ஊராட்சியில் புதிய சிமெண்ட் சாலையை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பு
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஒன்றியம் புதுப்பாக்கம் ஊராட்சியில் புதிய சிமெண்ட் சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர் திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எல்.இதயவர்மன், புதுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ம.ஆறுமுகம்.
இந்த நிகழ்சியில் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஏ.ரமேஷ், வாசுதேவன், கிளை கழக செயலாளர்கள் தாமோதரன், ஆறுமுகம், சிவகுமார், மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள், ஒன்றிய குழு உறுப்பினர், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments