• Breaking News

    கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பேரூராட்சி தலைவர் கே.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது


    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஒன்றியம் ,  கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி பா. சுந்தரம் செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கெம்பநாயக்கன்பாளையம் பேரூர் செயலாளரும் , கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் கே.ரவிச்சந்திரன் தலைமையில் சத்தியமங்கலம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ.ஏ.தேவராஜ் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர்  டி. இளங்கோ  வரவேற்புரையாற்றினார்.

     கெம்பநாயக்கன்பாளையம்  பேரூர் துணை செயலாளர்  ரஜினி தம்பி முன்னிலை வகித்தார். விழாவில் பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஜோதி ரமேஷ் ,  ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்  டி. நவீன் குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

    No comments