• Breaking News

    தரிசனத்துக்காக இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்..... திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு.....

     


    பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக இடைத்தரகர்களை நாடி சிரமப்பட வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து தேவஸ்தானம் அறிவித்தது, திருப்பதி வெங்கடேஸ்வரசாமி பக்தர்களின் அதிகாரப்பூர்வ வெப்சைட் ttdevasthanams.ap.gov.in என்ற முகவரியில் பக்தர்கள் தங்களின் ஆதார் அட்டை எண், முகவரி உள்ளிட்டவை பதிவேற்றம் செய்து தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளாலாம் எனவும், இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    தரிசன டிக்கெட்டுகள் மற்றும் சேவை டிக்கெட்டுகளை வழங்கும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையையும் திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ளது.

    No comments