• Breaking News

    அண்ணா அறிவாலயத்தில் மது பாட்டிலை வீசிய அதிமுக முன்னாள் நிர்வாகி

     


    கண்ணகி நகரை சேர்ந்த கோவர்தன் என்பவர் மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் வந்து தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மது பாட்டிலை வீசியதாக கூறப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து அவர் மதுவினால் தனது வீட்டில் பிரச்சினை ஏற்படுவதாகவும், நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என்றும் அவர் கோஷமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மது பாட்டிலை வீசிய அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகியை பிடித்த சென்னை தேனாம்பேட்டை போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments