• Breaking News

    திமுக ஆட்சியில் கொலைக்களமாக மாறிய தமிழகம் - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு


     திமுக ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறியுள்ளது என அதிமுக., பொதுச்செயலாளர் இபிஎஸ்., கூறியுள்ளார்.

    அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக கொலை தொடர்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளது மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது. விடியா திமுக ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

    தினம் அரங்கேறும் கொலை சம்பவங்களால் எப்படி மக்கள் பாதுகாப்பாக உணர முடியும்? எப்படி தினந்தோறும் அச்சமின்றி வேலைக்கு செல்ல முடியும்? எப்படி நம் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள்? எப்படி புதிய தொழில் முதலீடுகள் வரும்?

    அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதில் மட்டும் செலுத்தும் கவனத்தை சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளில் இனியாவது செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.

    No comments