முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய ஆதரவாளர் பிரவீன் ஆகிய இருவரும் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதில் ஜாமீனில் விடுதலையான இருவரும் தினமும் இரண்டு முறை கரூர் சிபிசிஐடி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர்.
இது தொடர்ந்து நேற்று காலை 11 மணியளவில் பிரவீன் கரூர் பகுதியில் உள்ள ரெட்டிபாளையம் என்னும் இடத்தில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த மர்மன் அவர்கள் பிரவினை கத்தியால் சரமாரியாக தாக்கினார்கள். அதன் பின் அங்கிருந்து அந்த மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இதில் பிரவீனுக்கு கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது.
இது தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு குறித்து வக்கீல் கரிகாலன் கூறுகையில் பிரவினை தாக்கிய அவர்கள் திமுகவினராக இருக்கலாம் என்றும் விஜய் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கும் மிரட்டல் வைத்துள்ளார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
0 Comments