• Breaking News

    கும்மிடிப்பூண்டியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் உழவர் உற்பத்தியாளர் நிறுவன ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது


    திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில்,வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின்  மூலம் ,தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம் நிலை 3 -ன் கீழ், உலக  வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்  கும்மிடிப்பூண்டி அங்கக உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் எலாவூரில் அமைந்துள்ள கும்மிடிப்பூண்டி உழவர் உற்பத்தியாளர்  நிறுவனங்களுக்கான இயக்குனர்கள் கூட்டம் ,கும்மிடிப்பூண்டி ஒருங்கிணைந்த  வேளாண் விரிவாக்க மைய கூட்ட அரங்கில்  திருவள்ளூர் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்)  திருமதி ஜீவராணி அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.

     பொன்னேரி  வேளாண் அலுவலர் (வேளாண் வணிகம்) திருமதி ச.அமுதா , உதவி வேளாண்மை அலுவலர்கள். திரு  இளங்கோ திரு. துரைராஜ். மற்றும் தேசிய வேளாண் நிறுவன அலுவலர்கள்  திரு.நேதாஜீ,  வினோத்,  விக்னேஷ். மற்றும் CEO அருண்ப்ரசாத், தயாமதி, நிறுவன தலைவர்கள் இயக்குநர்கள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் வணிக செயல்பாடுகள் மேம்படுத்துவது  குறித்தும், வேளாண் விளை பொருள்கள் வாங்கி விற்பது குறித்தும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம்  வணிகம் செய்வது குறித்தும் விலாதிக்கப்பட்டது. மேலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் ஒரு வருட ஆண்டு பரிவர்த்தனை ரூ .2.0  கோடி இலக்கு வைத்து, அதை அடைவதற்காக முயற்சிகள் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது.உழவர் உற்பத்தியாளர் நிறுவன நலனில் வேளாண் வணிகத்துறை என்றும் உறுதுணையாக இருக்கும் என  வணிகத்துறை அந்தாரிகள் தெரிவித்தனர்.

    No comments