• Breaking News

    வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப்பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..... புகைப்பட தொகுப்பு


     கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய வேளாங்கண்ணியில் உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டுப்பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10நாட்கள்  நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது முன்னதாக 5.45 மணிக்கு புனித ஆரோக்கிய மாதா  உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஆலயத்திலிருந்து  ஊர்வலமாக கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு வழியாக பேராலயம் வந்தடைந்தது அப்போது அங்கு திரண்டு நிற்கும் லட்சகணக்கான பக்தர்கள் மரியே வாழ்க, ஆவே மரியா என விண்ணை முட்டும் அளவிற்கு கோஷங்களை எழுப்பினர்.


    பின்னர் திருகொடியை தஞ்சை மறைமாவட்ட  ஆயர் சகாயராஜ் புனிதம் செய்து வைத்து சிறப்புத்திருப்பலி முடிந்தவுடன் ஆலயத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்தில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது கொடி கொடி மரத்தின் உச்சியை அடைந்ததும், ஒரே நேரத்தில் ஆலயம் முழுவதும் பொருத்தப்பட்டு இருக்கும் வண்ண மின்விளக்குகள் எரிய விடப்பட்டு, வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டது  வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று உள்ளனர்.

     திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெறுகின்றது.திருவிழா துவங்கியதை தொடர்ந்து 10 நாட்களும் நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, கூட்டுப்பாடல் திருப்பலி, நற்கருணை ஆசிர், கொங்கனி, மலையாளம், தெலுங்கு, இந்தி கன்னடம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நடைபெறுகின்றன.  பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராலய நிர்வாகம் செய்துள்ளது.

    மக்கள் நேரம் இணையதளம் எடிட்டர்

    நாகை மாவட்ட நிருபர் ஜீ.சக்கரவர்த்தி

    விளம்பர தொடர்புக்கு 9788341834















    No comments