விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், விநாயகர் சிலைகள் வடக்கு காவல் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பந்தலுக்கு மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.ஒரே ரதத்தின் முன்பக்கம் குரோதி கணபதி, பின்பக்கம் மோட்ச கணபதி என பல்வேறு வகையிலான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் மரவல்லிக் கிழங்கு மாவு, தேங்காய் நார் உள்ளிட்ட மூலப் பொருட்களால் சிலைகளை உருவாக்கி, வாட்டர் பெயிண்ட் மூலம் மெருகேற்றி உள்ளனர். விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் ரசித்தும், வணங்கியும் மகிழ்ந்தனர்.
0 Comments