• Breaking News

    ஜாதி பெயரில் இனி பள்ளிகள் இருக்காது.... அரசு பள்ளி மட்டும் தான்....

     


    தமிழகத்தில் ஜாதி பெயரில் செயல்பட்டு வரும் பள்ளிகளின் பெயர்களை நீக்க வேண்டும் என பல காலமாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நீதிபதி சந்துரு தலைமையிலான குழு முதல்வர் ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி ஆதிதிராவிடர் உள்ளிட அனைத்து விதமான ஜாதி பெயர்களையும் பள்ளிகளில் இருந்து நீக்கி அரசு பெயர்கள் என வைக்க வேண்டும் என அந்த குழு பரிந்துரை செய்தது.

    இதைத்தொடர்ந்து தற்போது அமைச்சர் கயல்விழி தமிழகத்தில் செயல்படும் ஜாதி பெயர் பள்ளிகள் அனைத்திற்கும் விரைவில் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்த பள்ளிகள் அனைத்தும் விரைவில் அரசு பள்ளிகளாக மாற்றப்படும் என்றும்  அறிவித்துள்ளார்.

    No comments