• Breaking News

    மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி விரைந்து அமைத்திட சென்னையில் சுகாதாரத்துறை இயக்குனரிடம் முன்னாள் எம்எல்ஏ ஜெக வீரபாண்டியன் நேரில் கோரிக்கை



    மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு நிரந்தரமாக அறுவை சிகிச்சை டாக்டர்கள் நியமனம், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எம் ஆர் ஐ ஸ்கேன் கடந்த ஓராண்டாக முறையான சேவை இல்லாமல் ரிப்போர்ட் கொடுப்பதற்கு டாக்டர் இன்றி இருப்பதால் மக்களுக்கு பயன்படாமல் உள்ளது என்னும் நிலையை எடுத்துரைத்து விரைந்து ஸ்கேன் டாக்டர் நியமிக்க வேண்டும் என்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என்றும் விரைந்து மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைத்திட முழு நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் ஜெய ராஜமூர்த்தி அவர்களிடம் நேரில் மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெக வீரபாண்டியன் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்கள். மிக முக்கியமான இம் மூன்று கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்ற முழு முயற்சிகள் எடுப்பதாக சுகாதாரத்துறை இயக்குனர் முன்னாள் எம்எல்ஏவிடம் உறுதி அளித்தார்.

    No comments