• Breaking News

    தாஜ்மஹாலில் சம்பவம் செய்த இந்து அமைப்பினர்.....

     

    உலகம் முழுவதும் தாஜ்மஹால் காதல் நினைவுச் சின்னமாக பார்க்கப்படுகிறது. இதனை ஷாஜகான் தன்னுடைய மனைவி மும்தாஜுக்காக கட்டினார். உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் தாஜ்மஹால் தற்போது பாஜக ஆட்சியில் சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாக மாறி உள்ளது. அதாவது பாஜகவினர் பலரும் முதலில் தாஜ்மஹால் இருந்த இடத்தில் இந்து கோவில் இருந்தது என்றும் அதனை இந்து மன்னர்கள் கட்டினார்கள் என்றும் கூறி வருகிறார்கள்.

    இந்நிலையில் அகில பாரத இந்து மகாசபையை சேர்ந்த அமைப்பினர் சுற்றுலா பயணிகள் போல் தாஜ்மஹாலுக்குள் சென்றனர். அதன் பின் அவர்கள் மும்தாஜ் மற்றும் ஷாஜகான் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்தில் கங்கை நீரை தெளித்தனர். அதன் பிறகு ஓம் என்ற ஸ்டிக்கரை தாஜ்மஹால் சுவற்றில் ஒட்டி உள்ளனர். இந்த சம்பவத்தில் வினேஷ் சவுத்ரி மற்றும் ஷியாம் பாபு சிங் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் மத்திய தொழிற்பனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    No comments