கடலூர்: தனியார் பள்ளி தலைமை ஆசிரியரை அடித்து உதைத்த மாணவியின் உறவினர்கள்

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக எடில் பெர்ட் பெலிக்ஸ்(45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் சென்ற வருடம் இங்கு படித்த மாணவி ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போல போட்டோ எடுத்ததோடு, அதனை தன் மொபைலில் ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார்.அந்த போட்டோ நேற்று சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. இதனை பார்த்த அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோபத்துடன் பள்ளிக்குச் சென்றனர். அங்கு தலைமை ஆசிரியரை சரமாரியாக அடித்து உதைத்ததோடு, அவரது சட்டையை கிழித்து ஜட்டியுடன் வெளியே இழுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் தலைமை ஆசிரியரை மீட்டு பள்ளிக்குள் அழைத்துச் சென்றனர். பின் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து எடில் பெர்ட் பெலிக்ஸிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.அனால் தற்போது அந்த மாணவி அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை எனவும் என்னுடைய விருப்பத்தின் பெயரில் தான் புகைப்படம் வைத்தார் என்று கூறியுள்ளார். அதோடு அவரை காதலிப்பதாகவும் அந்த மாணவி கூறியுள்ளார். இதனால் அந்த பெண்ணுக்காக நியாயம் கேட்க சென்ற மக்கள் முகம் ஒரு நிமிடம் … வாடிவிட்டது.. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments