மண்ணிவாக்கம் முதல்நிலை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம்
வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் முதல் நிலை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் பங்கேற்றனர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் மண்ணிவாக்கம் முதல் நிலை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் வண்டலூர் வட்டாட்சியர் புஷ்பலதா, ஒன்றியச் செயலாளர் எம்.டி.லோகநாதன், தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கெஜலட்சுமி சண்முகம் அனைவரையும் வரவேற்றனர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, கலைச்செல்வன், ஒன்றிய குழு துணை தலைவர் ஏவிஎம். இளங்கோவன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுமதி லோகநாதன், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம். எஸ்.கார்த்திக், ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
பின்னர் பொது மக்களிடம் குறைகளைக் கேட்டு மனுக்களை பெற்றனர். இதில் தமிழ்நாடு மின்சார வாரியம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, வருவாய் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வாழ்வாதார கடன் உதவிகள், காவல் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மீன்வளம் மீனவர் நலத் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, ஆகிய துறை சார்ந்த அரசு அலுவலர்கள், இம்முகாமில் பங்கேற்றனர். இதில் வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் ராமபக்தன் நன்றி கூறினர்.
No comments