அதிமுக கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன்
திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி அதிமுக சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பாலைவனம், வஞ்சிவாக்கம், கடப்பாக்கம், , தத்தமஞ்சி ஆகிய ஊராட்சி பகுதிகளில் கழகத்தினருக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி. பலராமன் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் நாலுர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் அதிமுக.கழக உறுப்பினர்களுக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி. பலராமன் அடையாள அட்டை வழங்கி பேசியதாவது:-
மக்கள் விரும்பிய நல்ல ஆட்சியை தமிழக மக்களுக்காக கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி யார் வழங்குவார் ஆகவே கழக நிர்வாகிகள் கழகத்தின் வெற்றிக்கு முழு அர்ப்பணிப்போடு பாடுபட வேண்டும் எவ்வாறு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி. பலராமன் பேசினார். இந்நிகழ்ச்சியில் மீஞ்சூர் ஒன்றிய கழக செயலாளர் நாலுர் முத்துக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் சுமித்ரா குமார், பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார், மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் பானு பிரசாத்,. மற்றும் நிர்வாகிகள் சங்கர், கடப்பாக்கம் ராஜா, மீஞ்சூர் மாரி, கவுன்சிலர் செல்வழகி எர்ணாவூரான், ஆசிரியர் உதயகுமார் சேகண்யம் சீனு, பொன்னேரி சத்தியமூர்த்தி, கிளை செயலாளர்கள் செஞ்சிமா நகர் நகர் கிளைச் செயலாளர் ஹரி.ராஜா, சம்பத், வலையப்பன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் ஊராட்சி செயலாளர் ராதாகிருஷ்ணன்.மற்றும் மீஞ்சூர் ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments