• Breaking News

    பொன்னேரி அருகே மதுரா தோப்புக்கோல்லை கிராமம் அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் அலய தீ மிதி திருவிழா

     

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி  வட்டம்  மதுர தோப்புக்கொல்லை   கிராமத்தில் அருள்பாலிக்கும்  அருள்மிகு ஸ்ரீ   எல்லையம்மன்   ஆலயத்தில்  பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.10 நாட்கள் நடைபெற்ற உற்சவங்களில் அம்மன் நாள்தோறும் வாண வேடிக்கைகளுடன் வீதி உலா வந்து   எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற வந்த்து அதனை தொடர்ந்து 10-ஆம் நாளான இன்று   அருள்மிகு ஸ்ரீ     எல்லையம்மன்  அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

    அதனை தொடர்ந்து  100 க்கும் மேற்பட்ட பக்தர்கள்  தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதில் பொன்னேரி ,கும்மிடிப்பூண்டியை சேரந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  சாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சி ஏற்பாட்டை கோவில் நிர்வாகி  பிரசாந்த். முன்னாள் கவுன்சிலர் திருமலை.கிராம மக்கள் இளைஞர் அணி மகளிர் குழுக்கள் செய்திருந்தனர்.

    No comments