தஞ்சாவூரில் கூட்டு பாலியல் பலாத்கார சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தது குறித்து விளக்கம் அளிக்கும்படி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தஞ்சாவூரில் 23 வயது இளம்பெண்ணை பாப்பநாடு பகுதியை சேர்ந்த கவிதாசன், 25, அவரது நண்பர்கள் திவாகர், 27, பிரவீன், 20,மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட இளம் பெண் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். ஆனால் சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள் மறுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், விசாரணையில் தகவல் அளித்ததார்.
இது தொடர்பாக ஒரத்தநாடு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிபதி என். அழகேசன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க தவறிய மருத்துவமனையில் அன்றைய தினம் பணியில் இருந்த டாக்டர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யக்கூடாது. சிகிச்சை அளிக்க ஏன் மறுக்கப்பட்டது என்பது குறித்து வரும் 27ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளார்.
0 Comments