வேம்பத்தி ஊராட்சி நாச்சிமுத்துபுரம் சக்தி மேல்நிலைப்பள்ளியில் அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் விலையில்லா மிதிவண்டி வழங்கினார்
ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அந்தியூர் ஒன்றியம் , வேம்பத்தி ஊராட்சி நாச்சிமுத்துபுரம் சக்தி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் 115 மாணவ , மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர்அவிநாசியப்பன் , இலக்கிய அணி மாவட்ட துணை தலைவர் அங்கமுத்து , முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் மாணிக்கம் , கூத்தம்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் பாவாயி ராமசாமி , ஓசைபட்டி பாலு, செல்வராஜ் , தங்கவேலு திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments