• Breaking News

    பாலியல் வழக்கில் கைதான சிவராமனை தொடர்ந்து அவருடைய தந்தையும் உயிரிழப்பு


     கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக காவல்துறையினர் கைது செய்வதற்கு முன்பாகவே எலிமருந்து சாப்பிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.

    இந்நிலையில் சிவராமன் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது அவருடைய தந்தை அசோக்குமார் உயிரிழந்துள்ளார். அதாவது அவருக்கு 61 வயது ஆகும் நிலையில் நேற்று நள்ளிரவு குடிபோதையில் சாலையில் சென்று கொண்டிருந்தார். இவர் காவேரிப்பட்டினம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டதில் உயிரிழந்துள்ளார். மேலும் ஒரே நாளில் தந்தை மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள நிலையில் ‌ இருவரின் சடலங்களையும் காவல்துறையினர் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    No comments