மக்களே உஷார்..... சுதந்திர தின வாழ்த்து மெசேஜை நம்பி ஏமாற வேண்டாம்

 

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில் சைபர் குற்றவாளிகள் தற்போது புதிய உக்தியை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். சுதந்திர தினம் பண்டிகையை குறிவைத்து பணத்தை கொள்ளையடித்து வருகிறார்கள்.முதலில் சுதந்திர தின வாழ்த்துக்கள் என்று மெசேஜ் அனுப்பப்படுகிறது. அதன் பிறகு போன் பே மற்றும் கூகுள் பே மூலமாக ரிவார்டு கிடைத்ததாக லிங்க் அனுப்புகிறார்கள். 

அந்த லிங்கை கிளிக் செய்தால் அவ்வளவுதான், நம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படும். சந்தேகத்திற்கிடமான நபர்களிடமிருந்து இது போன்ற செய்தி வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments