• Breaking News

    கல்வியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

     


    பள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த பல்வேறு இடங்களில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் அவர் பேசியுள்ளார். அதில் அவர் வரும் 24ஆம் தேதி அதிமுக சார்பில் கள்ளர் சீர் மரபினர் பள்ளிகளின் இணைப்பை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.அதைப்போல் 2023-2024 ஆம் ஆண்டு நிதி அமைச்சராக இருந்தவர்கள் எல்லா துறை சார்ந்து இருக்கின்ற பள்ளிகளை பள்ளி கல்வித்துறைக்கு கீழ் கொண்டு வர வேண்டும்  அறிவித்திருந்தார்கள். 

    அந்த அறிவிப்பு வந்த பின்பு அதற்கு தனி குழு அமைக்கப்பட்டு ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். அதன்பின் ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சர்களும் அவர்களது கருத்துகளை என்னிடம் வழங்கினர்.அதற்க்கு பின்பு அந்த அறிக்கையானது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அரசு அதற்கான எந்த முடிவுகளும் எடுக்கவில்லை. இறுதியாக அரசு நல்ல முடிவை எடுப்பார்கள் எனவும் முடிவை எடுத்த பின்பு போராட்டம் ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தலாம் எனவும் அதற்கு முன்பு இவ்வாறு போராட்டம் நடத்துவதாக அறிவித்தால் அது எவ்விதத்திலும் சரி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.இதைத்தொடர்ந்து அவர் “கல்வியை வைத்து கருத்துகளை சொல்லுங்கள் ஆனால் தயவுசெய்து கல்வியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்” எனவும் அவர் கூறியுள்ளார்.

     அதன்பின் அரசு பள்ளிகளில் உள்ள ஹைடெக் லேபுகளுக்கு தனியாக ஆசிரியர் வேண்டும் என்பதை நான் உறுதி செய்கிறேன் எனவும் 3 ஆண்டுகளில் திமுக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாகவும் அதற்காக மத்திய அரசு நமக்கு கொடுக்க வேண்டிய நிதியை தர மறுத்ததோடு புதிய கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தரப்படும் எனவும் கூறியுள்ளனர்.இதற்காக தற்போது முதல்வர் முயற்சி எடுத்துக் கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் எதிர் கட்சி தலைவர் போராட்டத்தை அறிவித்து வருவது தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு தான் என்றும் ஆர்ப்பாட்டம் போராட்டம் போன்றவற்றை நடத்துவதில் எந்த பயனும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    No comments