கோவில் திருவிழா பேனரில் கவர்ச்சி நடிகை புகைப்படம்.... காஜி பாய்ஸ் அட்ராசிட்டி

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் விநாயகர் கோவில் ஒன்று இருக்கிறது. அங்கு இருக்கும் நாகாத்தம்மனுக்கும், செல்லியம்மளுக்கும் ஆண்டுதோறும் ஆடி மாதம் பால்குடம் எடுத்துச் செல்வது வழக்கம். அந்த வகையில் அம்மனுக்கு வளைகாப்பு வைபோக விழாவை ஒட்டி பேனர்கள் ஊர் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது.

அந்த பேனர்களில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அவர்களது போட்டோவை வைத்திருந்ததோடு திரைப்பட நட்சத்திரங்களின் போட்டோக்களையும் சேர்த்து வைத்து அழகு பார்த்தனர்.இந்நிலையில் அவ்வாறு வைக்கப்பட்ட பேனர்கள் ஒன்றில், கவர்ச்சி நடிகையான மியா கலிபாவின் போட்டோ இடம்பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக மியா கலிபா பால்குடம் தூக்குவது போல் எடிட்டிங் செய்து வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனருக்கு ஒரு சில பேர் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.ஆனால் பலர் அதனை விமர்சித்தனர்.இதனால் எதிர்ப்புகள் பலமாக கிளம்பிய நிலையில்,காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பேனரை அகற்றினர்.

Post a Comment

0 Comments