• Breaking News

    கம்பம்: ரேஷன் கடையில் தேனி எம்பி தங்கதமிழ்செல்வன் திடீர் ஆய்வு


    தேனி மாவட்டம் கம்பம் கம்பமெட்டு காலனியில் உள்ள ரேசன் கடையில் தேனி எம்.பி தங்கதமிழ்செல்வன்ர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது கடை விற்பனையாளரிடம் மொத்தம் ரேசன் கார்டுகள் எத்தனை உள்ளது ? மேலும் வரும் அரிசி மற்றும் பருப்பு, சீனி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் தரம் , பொருட்களின் இருப்பு விவரம், விலைப்பட்டியல், கடை செயல்படும் நேரம், வார விடுமுறை நாள், கண்காணிப்பு குழு உறுப்பினர் விவரம் உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார். பின்னர் ரேசன் மூட்டைகளில் உள்ள அரிசியை பரிசோதித்து பார்த்தார். பின்னர் ரேசன் பொருட்களை உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் காலதாமதம் செய்ய கூடாது என ரேசன் கடை விற்பனையாளருக்கு உத்தரவிட்டார்.

     இதையடுத்து ஆய்வு முடித்து வெளியே வந்தபோது ரேசன் கடையை ஒட்டியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடந்தன. இதனை பார்த்த எம்.பி  கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியனை தொடர்பு கொண்டு குப்பைகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்பேரில் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி அப்பகுதியில் கிருமி நாசினி பவுடரை தூவினர்.எம்.பியின் நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

    No comments