உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் வாக்கத்தான் நடைபெற்றது
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியின் உடற்கல்வித் துறை சார்பில் 2024 ஆகஸ்ட் 23 அன்று தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடும் வகையிலும், ஹாக்கி விசார்டு என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் இந்திய ஹாக்கி அணி விளையாட்டு வீரர் மேஜர் தயான்சந்த் அவர்களின் பிறந்தநாளின் அன்பான நினைவாகவும் கல்லூரியின் மாணவிகள் விடுதியிலிருந்து கல்லூரியின் முதன்மைக் கட்டிடம் வரை கல்லூரியின் உள் வளாகம் முழுவதும் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு வாக்கத்தான் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 1500 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலாளர் ஹாஜி. எம். தர்வேஷ் முகைதீன் மற்றும் மேலாண்மை குழுத் தலைவர் ஹாஜி. எஸ். முகமது மீரான் தலைமை தாங்கி கல்லூரியின் முதல்வர் ஹாஜி. முனைவர். ஹச். முகமது மீரான் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மேலும் அவர்களும் இந்த வாக்கத்தான் நடைப் போட்டியில் கலந்து கொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் வாக்கத்தான் தொலைவைக் கடந்து நிறைவு செய்தனர். மேலும் கல்லூரியின் முதல்வரின் சிறப்புரையின் போது இது போன்ற நிகழ்ச்சிகள் மாணவர்கள் மத்தியில் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது என்று கூறினார். இந்நிகழ்ச்சி மிகவும் உற்சாகமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க கப்பட்டது. கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் முனைவர். பி. அக்பர் அலி அவர்கள் வாக்கத்தான் போட்டியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
No comments