அம்மா கேரம் கிளப் நடத்திய இபிஎஸ் கோப்பைகான விளையாட்டுப் போட்டி.... வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகளும் பரிசு தொகையினையும் மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் வழங்கி பாராட்டினார்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் கிழக்குப் பகுதியில் பகுதி செயலாளர் கூத்தன் தலைமையில், மாமன்ற உறுப்பினர் சாய் கணேஷ் முன்னிலையில், பொன்னுசாமி கோபால் அனைவரையும் வரவேற்றனர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் பி.ஜி ராஜ்குமார், 47-வது வார்டு மேற்கு வட்ட பிரதிநிதி பொன்.புருஷோத் ஏற்பாட்டில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கேரம் போர்டு விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட இ.பி.எஸ் கோப்பைகான மாபெரும் கேரம் போர்டு போட்டி நடைபெற்றது.அம்மா கேரம் கிளப்பின் சார்பில் ஆண்டுதோறும் நடக்கும் இந்த கேரம் போர்டு போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முதல் பரிசாக 15000 கோப்பையும், இரண்டாம் பரிசாக பத்தாயிரம் ரூபாயும் கோப்பையும், மூன்றாம் பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும் கோப்பையும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வழங்கப்பட்டது.பின்பு ஏழை எளிய மக்களுக்கு காய்கறிகள் அடங்கிய பெட்டகத்தினை மாவட்ட கழக செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், மற்றும் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்வில் பகுதி கழகச் செயலாளர் எல்லார் செழியன், கோபிநாதன் பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மதுரைப்பாக்கம் மனோகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் காசிராஜன், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் தில்லை ராஜ், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் வினோத்குமார், செந்தில்குமார், ரவிச்சந்திரன், ராஜேஷ் உள்ளிட்ட வட்டக் கழக பகுதி கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்
No comments