மத்திய அரசுக்கு இருப்பது இதயமா இல்லை கல்லா....? அமைச்சர் துரைமுருகன் ஆதங்கம்
வேலூரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வயநாடு நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இது ஒரு துயரமான சம்பவம். ஆனால் இந்த சம்பவத்தை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை. மத்திய அரசுக்கு இருப்பது இதயமா இல்லை கல்லா.? இந்த நிலச்சரிவினால் பலர் உயிரிழந்த நிலையில் வயநாடு கண்ணீர் கடலில் மிதக்கிறது.
இருப்பினும் இதனை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார். மேலும் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள 3 பகுதிகளில் கடந்த 29ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments