• Breaking News

    என் ரூமுக்கே வந்த தயாரிப்பாளர்..... குஷ்பு சொன்னது உருட்டா....? உண்மையா.....?

     


    தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. இவர் படங்களில் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து  வருகிறார். அதன் பிறகு பாஜக கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார். இந்நிலையில் நடிகை குஷ்பூ மலையாள சினிமாவில் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பேசி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, பல வருடங்களுக்கு முன்பாக ஒரு படத்தின் சூட்டிங்கில் கலந்து கொண்டேன். அப்போது தயாரிப்பாளர் ஒருவர் திடீரென என்  ரூமுக்குள் வந்தார். அவர் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசினார்.

    நான் அப்போது என் காலில் உள்ள செருப்பை காண்பித்து இதன் சைஸ் 42. இதை நான் கழட்டுமா என்று கேட்டேன். உடனடியாக அவர் அங்கிருந்து சென்று விட்டார் என்று கூறினார். மேலும் நடிகை குஷ்பூ தயாரிப்பாளர் ஒருவர் தவறான நோக்கத்தில் அணுகி தியாகக் கூறிய நிலையில் நடிகை ராதிகா மலையாள திரையுலகில் கேரவேனுக்குள் ரகசிய கேமரா இருக்கும் என்றும் அதை செல்போனில் வீடியோவாக நடிகர்கள் உட்பட பட குழு அனைவரும் உட்கார்ந்து பார்த்து ரசிப்பார்கள் எனவும் அதை தான் நேரில் பார்த்ததாகவும் அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார். இப்படி நடிகைகள் பலரும் அடுத்தடுத்து பாலியல் புகார்கள் குறித்து வெளிப்படையாக கூறி வருவது ஒட்டுமொத்த திரையுலகையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

    No comments