• Breaking News

    பொன்னேரி தொகுதி அண்ணாமலைச்சேரி மீனவ கூட்டுறவு சங்க தேர்தல்..... படகு சின்னத்தில் போட்டியிட்ட கர்ணன் வெற்றி.....


    திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம் சிறுளப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாமலைச்சேரி மீனவர் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயக முறையோடு அண்ணாமலைச்சேரி மீனவ கூட்டுறவு சங்கத்திற்கான தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் போட்டியிட்டனர் . படகு சின்னத்தில் கர்ணன் என்பவரும்,மீன் சின்னத்தில் தேவேந்திரன் என்பவரும்,இறால் சின்னத்தில் அசோக் என்பவரும்,நண்டு சின்னத்தில் ஜெயராமன் என்பவரும்   போட்டியிட்ட  நிலையில். தேர்தலின் போது எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது எனவும் தேர்தலை முழு கிராம பொதுமக்களே நடத்துவர் எனவும் அரசியல் தலையீடு, தனிநபர் தலையீடு ஏதும் இருக்கக் கூடாது எனவும் தேர்தல் பிரச்சனை ஏற்பட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் கடுமையான விதிமுறைகளை கிராம மக்கள் பின்பற்றி வந்தனர். 

    கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் உண்டியல் அமைத்து அதில் வாக்குச்சீட்டுகளை செலுத்தி தேர்தல் நடத்திய நிலையில் . அண்ணாமலைச்சேரி மீனவ கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள 579 நபர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி  வந்தனர். தொடர்ந்து படகு( BOAT) சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் கர்ணன் 192 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் அதனைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில்  இறால் சின்னத்தில் போட்டியிட்ட  அசோக் குமார் 190 வாக்குகள் பெற்றார் .

    திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை வழங்கும் மீனவர் சலுகைகளுக்காக அமைக்கப்பட்ட மீனவ கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கான கூட்டமைப்பு அடுத்த நான்கு மாதங்களில் நடைபெற இருப்பதால் அதற்காக நான்கு மாதங்களுக்கு முன்பே அண்ணாமலைசேரி மீனவ கூட்டுறவு சங்கத்திற்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் பொருட்டு இந்த தேர்தல் நடைபெற்றது. கூட்டமைப்பு மூலம் கிராம மக்களுக்கு தேவையான சலுகைகள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்ட மீனவர் நலத்துறை சார்பில் பெற்று தரும் நிர்வாகிகளுக்கான தேர்தலாக இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    No comments