• Breaking News

    கம்பம்: தலைக்கவசம் அணிந்து செல்லும் வாகன ஓட்டியினருக்கு மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்திய போக்குவரத்து காவல்துறையினர்


    தேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து காவல்துறை மற்றும் அன்பு அறம் செய் தொண்டு நிறுவனம் சார்பில் இருசக்கர வாகன தலை கவசம் பற்றிய விழிப்புணர்வு தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்றது.

    இந்த விழிப்புணர் நிகழ்ச்சியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. போக்குவரத்து விதிகளை கடைபிடிப்போம், விபத்திலா பயணங்களை தொடர்வோம், தலைமுறைக்கு நல்லதை செய்து விடுவோம், மாசில்லா காற்றை சுவாசித்திட மரக்கன்றுகளை நடவு செய்திடுவோம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற வாசகங்களை கூறி விழிப்புணர்வு செய்தனர்.

    அரசு மருத்துவமனை முன்பு சாலையில்  தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றனர்.தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேனி மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் செங்கோட்டு வேலவன், கம்பம் போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கார்த்திக் ராஜா, சக்கப்பன் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள், மற்றும் தொண்டு நிறுவனங்கள் என பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினர்.

    No comments