சிவகங்கையில், முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான அண்ணாமலையின் விமர்சனங்களை கண்டித்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு நன்றி தெரிவித்து ஒரு அதிமுக நிர்வாகி போஸ்டர் ஒட்டியுள்ளார்.
பொதுவாக இது போன்ற நிகழ்வுகளுக்கு சமூக வலைதளங்களில் நன்றி சொல்வது வழக்கம். ஆனால் 1 படி மேலாக சென்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து வரும் அண்ணாமலையை எதிர்த்து சீமான் பேசியது அதிமுகவினர் சிலருக்கு ஆறுதலாக இருந்துள்ளது. இதன் காரணமாகவே ஒரு அதிமுக நிர்வாகி சீமானுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியிருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
0 Comments