அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்..... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. மாநாட்டில், தமிழில் அவர் பேசியதாவது: மாநாட்டில் கலந்து கொண்ட தொழில் அதிபர்களை வரவேற்கிறேன். 75 ஆண்டுகால அரசியல் இயக்கத்தின் தலைவராக நான் இருக்கிறேன். இப்போது தமிழகத்தில் 6வது முறையாக ஆட்சி செய்து கொண்டு இருக்கிறோம்.
இந்தியாவில் எங்களது கூட்டணி பல முறை பிரதமர்களை உருவாக்கி, ஆட்சி அமைக்க வைத்திருக்கிறது. தமிழகத்தில் கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்திருக்கிறார். இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் இன்று விளங்கி கொண்டு இருக்கிறது.அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலம் தமிழகம். இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் 20% தமிழகத்தில் தான் உள்ளன. இந்தியாவின் தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாக கொண்ட மாநிலம் தமிழகம். இந்திய தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 45 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
300க்கும் மேற்பட்ட அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் தமிழகத்தில் தங்களது நிறுவனங்களை நிறுவி உள்ளன. சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் 231 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. திறன்களை முன்வைத்து வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.உயர்ந்த மனித வாழ்வியல் கொண்டது அமெரிக்கா என்ற அடிப்படையில், தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிக்க வரும்படி சிவப்பு கம்பளம் விரித்து முதலீட்டாளர்களை வரவேற்கிறது தமிழகம். செமி- கண்டக்டர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் உங்களின் முதலீடுகளை நான் வரவேற்கிறேன்.
வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஏராளமான முன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். 2030ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு நோக்கி செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
No comments