• Breaking News

    உலகளவில் சிறந்த ரிசர்வ் வங்கி கவர்னராக சக்தி காந்த தாஸ் மீண்டும் தேர்வு

     

    அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு 1987 ல் துவங்கப்பட்ட ‛குளாபல் பைனான்ஸ் ' என்ற இதழ், 1994 ம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்படும் ரிசர்வ் வங்கி கவர்னர்களை அங்கீகரித்து வருகிறது. உலகின் 100 முக்கிய நாடுகளின் ரிசர்வ் வங்கி கவர்னர்கள், ஐரோப்பிய யூனியன், கிழக்கு கரீபியன் ரிசர்வ் வங்கி, மத்திய ஆப்ரிக்க ரிசர்வ் வங்கி, மேற்கு ஆப்ரிக்க மாநிலங்களின் ரிசர்வ் வங்கி மற்றும் ஆசிய வங்கிகள் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளை கணித்து வருகிறது.

    பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது, பொருளாதார வளர்ச்சி இலக்குகள், ரூபாய் நோட்டு ஸ்திரத்தன்மை மற்றும் வட்டி விகித நிர்வாகம் ஆகியவற்றை சிறப்பாக கையாண்ட ரிசர்வ் வங்கி கவர்னர்களை கிரேடிங் முறையில் ‛ ஏ பிளஸ் ' முதல் ‛ எப் ' வரை தரவரிசைபடுத்துகிறது. ‛ ஏ' என்றால் சிறப்பாக செயல்படுதல் ‛ எப்' என்றால் தங்களது செயல்பாடுகளில் தோல்வியுற்ற வங்கித் தலைவர்களின் பெயர் இடம்பெற்று இருக்கும். 2023ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் ‛ ஏ பிளஸ் ' ரேங்கிங் பெற்று இருந்தார்.

    2024ம் ஆண்டிற்கான தர வரிசைப்பட்டியலை குளோபல் பைனான்ஸ் இதழ் வெளியிட்டு உள்ளது. இதில், இந்த ஆண்டும் சக்திகாந்த தாஸ் ‛ ஏ பிளஸ் ' ரேங்கிங் பெற்று உள்ளார். டென்மார்க் ரிசர்வ் வங்கி கவர்னர் கிறிஸ்டியான் கெட்டல் தாம்சன் மற்றும் சுவிஸ் ரிசர்வ் வங்கி கவர்னர் தாமஸ் ஜோர்டான் ஆகியோரும் ‛ ஏ பிளஸ் ' ரேங்கிங் பெற்றுள்ளனர்.

    No comments