டி.என்.பி.எல் சாம்பியன் பட்டம் யாருக்கு....? திண்டுக்கல் - கோவை அணிகள் இன்று பலப்பரீட்சை
8 அணிகள் பங்கேற்றிருந்த 8-வது டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் முதலாவது தகுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் அணியும், நேற்று முன் தினம் நடைபெற்ற 2-வது தகுதி சுற்றில் வெற்றி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு நடைபெற உள்ளது.
No comments