நான் காக்கி சட்டையில் இருப்பது அவ்வளவு பயமா - சீமானுக்கு எஸ்பி வருண்குமார் பதிலடி
தமிழகத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய தவறாக பாடல் பாடியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு திருச்சி எஸ்.பி வருண்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இடையே தொடர்ந்து வார்த்தை மோதலல்கள் அதிகரித்துவிட்டது. குறிப்பாக திருச்சி எஸ்பி மற்றும் அவருடைய குடும்பத்தினர் பற்றி சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறுகள் பரவி வந்தது. இதனால் நேற்று எக்ஸ் பக்கத்தில் இருந்து வருண் குமார் ஐபிஎஸ் மற்றும் அவருடைய மனைவியும் புதுக்கோட்டை எஸ்பியுமான வந்தனா பாண்டே ஆகியோர் விலகுவதாக அறிவித்தனர். அதன்பிறகு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர போவதாக வருண்குமார் கூறியிருந்த நிலையில் இது தொடர்பாக சீமான் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, என்னைப் பற்றியும் என் மனைவியை பற்றியும் எவ்வளவு கேவலமாக எழுதுகிறார்கள்.
அதெல்லாம் நீங்கள் சொல்லி தான் எழுதினார்கள் என்று சொல்லலாமா.? உங்களுக்கு தான் மானம் இருக்கிறதா.? எங்களுக்கு இல்லையா? உங்களுக்கு வீரம் இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வாருங்கள் நேருக்கு நேர் மோதிப் பார்க்கலாம் என்று சவால் விடுத்திடுத்தார். இதற்கு தற்போது வருண்குமார் ஐபிஎஸ் whatsapp ஸ்டேட்டஸ் இல் பதிலடி கொடுத்துள்ளார். அதில் பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவது, நில அபகரிப்பு மற்றும் ரவுடித்தனம் செய்வது போன்றவற்றை சிலர் நிறுத்தினால் நான் காக்கி சட்டையை கழற்றுவது பற்றி யோசிக்கிறேன். இந்த பதவி பிச்சை எடுத்தோ அல்லது திரள் நிதியிலோ வந்த பதவி கிடையாது. இரவு பகலாக ரத்தம் சிந்தி கண்ணீர் சிந்தி படித்து கஷ்டப்பட்டு வந்த பதவி. உயிரைப் போல் நேசித்த இந்த காக்கி சட்டை மீதான காதல் எப்போதும் தொடரும். மேலும் நான் காக்கி சட்டையில் இருப்பது அவ்வளவு பயமா என்று கூறியுள்ளார்.
No comments