கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பற்றிய வதந்தி..... மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குவிந்த மக்கள்......
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்காக ஆட்சியர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும் வாட்ஸ் அப் மூலமாக தகவல் ஒன்று பரவியது. இந்த தகவலை நம்பிய பெண்கள் பலரும் நெல்லை, விழுப்புரம், மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குவிந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் வாட்ஸ் அப்பில் வரும் தவறான தகவலை நம்பி யாரும் வர வேண்டாம் என்று அதிகாரிகள் தெரிவித்து அனுப்பி வைத்தனர். மேலும் சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
No comments