சிங்கப்பெருமாள்கோவிலில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் எம்எல்ஏ பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவி லில் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் வரலட்சுமிமதுசூதனன் எம் எல் ஏ பங்கேற்றனர். தமிழக அரசின் உத்தரவின்படி மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் சிங்கப்பெருமாள்கோவி லில் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் தலைமை தாங்கினார்.
ஒன்றிய கவுன்சிலர் மோகனா ஜீவானந்தம், வீராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் டில்லி, ஆகியோர் முன்னில வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன் ஆகியோர் கலந்துகொண்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
பின்னர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். இதில் அரசு அலுவலர்கள், மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, கலைச்செல்வன் நன்றி கூறினார்.
No comments