பாப்பன் குப்பம் கிராமத்தில் தொழிற்சாலைகளின் சமூக பங்களிப்பு நிதியில் கட்டப்பட்ட இலவச மருத்துவமனையை டி.ஜெ.கோவிந்தராஜ் எம்எல்ஏ திறப்பு
கும்மிடிப்பூண்டி அடுத்த எஸ்.ஆர். கண்டிகை ஊராட்சி பாப்பன்குப்பம் கிராமத்தில் கட்டப்பட்ட இலவச மருத்துவமனையை கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.கும்மிடிப்பூண்டி அடுத்த எஸ்.ஆர். கண்டிகை ஊராட்சி பாப்பன்குப்பம் பகுதியில் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள பிர்லா கார்பன் நிறுவனம், ஓ பி ஜி பவர் பிளான்ட், ஏஆர்எஸ் பவர் பிளான்ட், ராம்கி நிறுவனத்தின் பங்களிப்பில் எஸ்.ஆர் கண்டிகை ஊராட்சி, காவிரி மருத்துவமனை இணைந்து உருவாக்கிய இலவச மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகா முரளி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் பங்கேற்று மருத்துவமனையை திறந்து வைத்து பேசும் போது மேற்கண்ட 4 தொழிற்சாலைகளில் பங்களிப்பிற்காகவும், இந்த மருத்துவமனை உருவாக்க காரணமாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகா முரளிக்கும் பாராட்டு தெரிவித்தனர், தொழிற்சாலைகள் அவர்கள் பகுதியில் உள்ள கிராமங்களில் சமூக பொறுப்பு நிதியில் நலத்திட்டங்களை செய்வதை இரண்டாம் பணியாகவும், காற்று, நிலம் ,நீர் மாசுபடுவதை கட்டுப்படுத்துவதையே கட்டாயமான முதல் பணியாக கொள்ள வேண்டுமென்றார்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி .உமா மகேஸ்வரி, பிர்லா கார்பன் நிறுவன கும்மிடிப்பூண்டி பிரிவு தலைவர் விவேக் மாத்தூர், மனிதவளத் துறை தலைவர் காரல் மார்க்ஸ், மனிதவளத்துறை மேலாளர் ராஜன், ஓபிஜி நிறுவன கும்மிடிப்பூண்டி பிரிவு தலைவர் சபரி, மனிதவளத்துறை துணை பொது மேலாளர் சுரேஷ், ராம்கே நிறுவன அதிகாரி ஸ்ரீதர் ரெட்டி, காவேரி மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் கவிதா, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் மகேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து மருத்துவமனை உலகத்தில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் மரக்கன்றுகளை நட்டார்.இந்த நிகழ்வில் திமுக மாவட்ட பொருளாளர் எஸ். ரமேஷ், திமுக நிர்வாகி பிரபாகரன் கவுன்சிலர் மெய்யழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments