குழந்தையை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு நாடகமாடிய தாய்

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிரகாஷ்-சத்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அதிசயா (7) என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை கடந்த இரு தினங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டதாக சத்யா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

அந்த புகாரின் படி சங்கராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அதிர்ச்சி தகவல் காத்திருந்தது.அதாவது சத்யா தன்னுடைய குழந்தை காணாமல் போனதாக சொன்ன அதே நேரத்தில் அவர் வீட்டில் இருந்து குழந்தையை வெளியே அழைத்து சென்றுள்ளார். அதன்பின் சிறிது நேரத்தில் அவர் மட்டும் தனியாக திரும்பி வந்தார். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருந்த நிலையில் சத்யாவிடம் காவல்துறையினர் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர்.

 அப்போது அவர் தன்னுடைய குழந்தையை குடும்பத் தகராறு காரணமாக கிணற்றில் வீசி கொலை செய்து விட்டதாக கூறினார்.இதைத்தொடர்ந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Post a Comment

0 Comments