• Breaking News

    மும்பையில் பல்வேறு திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

     


    பிரதமர் நரேந்திர மோடி இன்று மராட்டிய மாநிலத்துக்கு சுற்றுப்பயணமாக வருகிறார். மும்பைக்கு வருகை தரும் அவர், ஜியோ உலக மாநாட்டு மையத்தில் காலை 11 மணி அளவில் குளோபல் பின்டெக் பெஸ்ட் -2024 நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.

    அதன்பிறகு 1.30 மணி அளவில் பால்கரில் உள்ள சிட்கோ மைதானத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் என பிரதமர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பால்கரில் சுமார் ரூ.76 ஆயிரம் கோடி மதிப்புள்ள வாதவான் துறைமுக திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    No comments