முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்கா பயணம்
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார். அதாவது முதலீடுகளை ஈர்கும் பொருட்டு அவர் அமெரிக்கா செல்கிறார். சென்னையிலிருந்து இன்று இரவு அமெரிக்காவிற்கு விமானத்தில் முதல்வர் கிளம்புகிறார். இந்நிலையில் 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயத்துள்ளார். இதற்காக பல்வேறு புதிய தொழில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதோடு தொழில்களை எளிமையாக்கும் விதமாக பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு கொள்கைகளும் வெளியிடப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்ற நிலையில் 6 லட்சம் கோடிக்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே துபாய், அபுதாபி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அந்த வகையில் தற்போது முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல இருக்கிறார்.
No comments