திருமாவளவன் ஆசையை நிறைவேற்ற திட்டம் போடும் பாஜக...?
பாஜக, தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முக்கிய தலைவர்களை முன்னிலைப்படுத்தி, ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளது. அதன்படி, அடுத்த தேர்தலில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து பேச்சுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த முடிவு, பாஜகவின் கூட்டணிக்குள் கூடுதல் கட்சிகளை இணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் முன்பாக, தலித் சமூகத்தினர் முதல்வர் ஆக முடியாது என்ற ஆதங்கத்தை விசிக தலைவர் திருமாவளவன் வெளிப்படுத்தியிருந்தார். இதை கருத்தில் கொண்டு பாஜக இந்த முடிவு எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
பாஜகவின் இந்த முடிவு, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது எதிர்வரும் தேர்தல்களில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கவும் இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments