வேலூர்: சொத்துப்பிரச்னை காரணமாக தம்பியை கொலை செய்த அண்ணன் கைது

 


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சொத்துப்பிரச்னை காரணமாக தம்பியை கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.கீழ்செட்டிகுப்பம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கம்பிகட்டும் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் இவருடைய தம்பி கவியரசனுக்கும் இடையே சொத்து தொடர்பான பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில் கார்த்திகேயன், கவியரசனை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதையறிந்த போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர்.

Post a Comment

0 Comments