• Breaking News

    வாழை கதையை ஆட்டையை போட்ட மாரி செல்வராஜ்.....? எழுத்தாளர் சோ.தர்மன் புலம்பல்......


    சோ தர்மன் எழுதிய சிறுகதை அடிப்படையிலேயே மாரி செல்வராஜ் ‘வாழை’ படத்தை உருவாக்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ தர்மன், தனது சிறுகதையை அனுமதி இல்லாமல் படமாக்கியதாக மாரி செல்வராஜை குற்றம் சாட்டியுள்ளார்.

    தனது சிறுகதையில் உள்ள கதாபாத்திரங்கள், காட்சிகள் அனைத்தும் வாழை படத்தில் காணப்படுவதாகவும், மாரி செல்வராஜ் தனது வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் என கூறுவது தவறு என்றும் சோ தர்மன் தெரிவித்துள்ளார். தனது தாய்மாமன் ஊரான பொன்னங்குறிச்சிக்கு சென்ற போது அங்கிருந்து கிடைத்த அனுபவங்களை வைத்து தான் இந்த சிறுகதையை எழுதியதாகவும் அவர் கூறியுள்ளார்.மறுபுறம், மாரி செல்வராஜ் தனது வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் தான் வாழை படம் என கூறி வருகிறார். இது கோலிவுட் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யார் சொல்வது உண்மை என்பதை காலம் தான் சொல்லும். என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    No comments