• Breaking News

    கட்சிக்கொடி விவகாரம்.... சட்ட நிபுணர்களுடன் விஜய் தீவிர ஆலோசனை....

     

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். இவர் சமீபத்தில் கட்சி கொடியை ஆரம்பித்து வைத்த நிலையில் அதில் யானை சின்னம் இருப்பது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. குறிப்பாக தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி யானை எங்கள் சின்னம் என்பதால் உடனடியாக கொடியிலிருந்து அந்த சின்னத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 

    இது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரியிடம் பகுஜன் சமாஜ் கட்சியினர் புகார் கொடுத்துள்ளனர்.இந்நிலையில் நடிகர் விஜய், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனைக்கு பிறகு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கேட்டால் அவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்க தவெக கட்சி முடிவு செய்துள்ளது. 

    அதாவது தங்கள் கட்சி கொடியில் இருக்கும் சின்னம் எந்த ஒரு கட்சியின் சின்னத்திருக்கும் பொருந்தாது எனவும் மேலும் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டால் உரிய விளக்கம் அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

    No comments