• Breaking News

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா


    ஈரோடு  மாவட்டம் , பவானிசாகர் சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் , சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன்  62-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.இந்த பிறந்தநாள் விழாவில் சத்தியமங்கலம்,பவானிசாகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது.இறுதியாக தொல்.

    திருமாவளவன் 62-வது பிறந்தநாள் விழா சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தம் முன்பு பவானிசாகர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன்.தம்பிராஜன் தலைமையிலும் சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆ.கு.சுப்பிரமணியம் வரவேற்புரையிலும் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆம்னி துரை, ஊடக மைய மாநில துணை செயலாளர் பூபதி இராஜராஜ சோழன், கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் வீர.துரைசாமி, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் திருமா.முனியப்பன், வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் கோபால்சாமி, மகளிர் விடுதலை இயக்க ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் சிறுத்தை சித்ரா, மகளிர் விடுதலை இயக்க ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் குரைஷ் பாத்திமா, மகளிர் விடுதலை இயக்க பவானிசாகர் தொகுதி செயலாளர் கலாமணி, பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்.சத்தியமூர்த்தி , சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் திருமாபிரபு, பவானிசாகர் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் விஜயன், சத்தியமங்கலம் நகர பொறுப்பாளர் சிறுத்தை சிவா , பவானிசாகர் பேரூர் செயலாளர் கனகராஜ், நம்பியூர் நகர செயலாளர் வைத்தியர் மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் மாவட்ட செயலாளர் மிசா.தங்கவேல் , ஈரோடு- திருப்பூர் மண்டல செயலாளர் பெ.சா.சிறுத்தைவள்ளுவன், வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி ஆகியோர் கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இவ்விழாவில் சிறப்பு அழைப்பார்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சென்னியப்பன், திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் சதுமுகை பழனிச்சாமி கலந்து கொண்டனர்.

    விழாவில் ஏழை,எளிய பெண்களுக்கு இலவசமாக சேலைகள் வழங்கப்பட்டது.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் கட்சியின் மாநில,மாவட்ட,தொகுதி,ஒன்றிய,நகர,பேரூர் நிர்வாகிகள் மற்றும் துணைநிலை அமைப்புக்களின் அனைத்து பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.200- க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் சத்தியமங்கலம் நகர ஒருங்கிணைப்பாளர் சிறுத்தை சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    No comments