நான் முதலில் பெண். அதற்குப் பின்பு தான் நடிகை..... நடிகை டாப்ஸி காட்டம்.....
டாப்சி பன்னு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் 2010 ஆம் ஆண்டு “சும்மாண்டி நாதம்” என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவர் தமிழில் ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை டாப்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பாப்பரசிகள் மூலம் ஏற்பட்ட கசப்பான நிகழ்வைப் பற்றி பேசினார். அதில் ” நான் பிரபலமான நபர், பொது சொத்து கிடையாது. ஒருவர் வந்து சாதாரணமான பெண்ணிடம் போட்டோ எடுக்க அனுமதி கேட்டால் அவர் அனுமதி அளிப்பாரா?. அதேபோல் தான் நாங்களும்.
நாங்கள் இல்லை முடியாது என்றால் ஏற்க மறுக்கிறார்கள். நான் முதலில் பெண். அதற்குப் பின்பு தான் நடிகை, நான் இப்படி சொல்வதால் இது எனக்கு ஏற்ற தொழில் அல்ல என் பலரும் நினைக்கலாம். ஆனால் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இது என்னுடைய தொழில் என்னுடைய இஷ்டம்” எனவும் அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
No comments