சத்தியமங்கலம்: மக்களுடன் முதல்வர் முகாம் திட்டத்தை ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.சி.பி.இளங்கோ குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , புதுப்பீர்கடவு , இக்கரைநெகமம் , ராஜன்நகர் ஊராட்சிகள் மக்களுடன் முதல்வர் முகாம் திட்டத்தினை சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் , சத்தியமங் கலம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி. இளங்கோ குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
சத்தி ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சுப்புலட்சுமி சுப்பிரமணியன், சத்தியமங்கலம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ. ஏ. தேவராஜ் , ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்திரமணி, செல்வன் , மகேந்திரன் (பொறுப்பு) முருகன் ஆகியோர்களின் முன்னிலையில் நடைபெற்றது . ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா , கோண மூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன்( எ) செந்தில்நாதன், கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவரும், பேரூர் செயலாளர் கே. ரவிச்சந்திரன் மற்றும் துணைத் தலைவர் ரஞ்சிதா மகேஷ் , சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி ரமேஷ், சி. ஆர். செல்வராஜ் , ஆறுமுகம் ஒன்றிய ஆதிதிராவிடர் நல குழு அமைப்பாளர் குணசேகரன், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அசோகன், இளைஞர் அணி அமைப்பாளர் சந்தோஷ் குமார் , ரஜினி முருகன், புதுப்பீர்கடவு பண்ணாரி, அருண்குமார், ராஜன்நகர் செல்வன் , அனைத்து துறையை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் , வார்டு உறுப்பினர்கள் , கிளைச் செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் , பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு திட்டத்தில் பயன்பெற்றனர்.
No comments