சிவகங்கை அருகே உள்ள சுந்தரப்பட்டியில் உள்ள கண்மாய் கரையில் அமைந்துள்ளது நச்சியம்மன் கோயில். இந்த கோயிலின் ஆடி திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்த வருகை தந்த நிலையில்,கோயிலை நோக்கி கண்மாய்கரை வழியாக சென்றபோது கோயில் அருகே உள்ள ஆலமரத்தில் இருந்த கதம்ப வண்டுகள் படையெடுத்து விரட்டி விரட்டி கடித்தன.இதில் , சாய், லெட்சுமி, கணேசன், லித்திகாஸ்ரீ, நந்தினி, முக்கியநாத், சுஜு, ஸ்ரீதர்ஷினி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
0 Comments