அறந்தாங்கி அருகே ரோட்டரி சார்பில் குளம் தூர்வாரும் திட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலப்பட்டு ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட அய்யனார் கோவில் குளம் தூர் வாரும் திட்டம் அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பாக துவங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் அப்துல் பாரி தலைமை தாங்கினார். மண்டல ஒருங்கிணைப் பாளர் சுரேஷ்குமார், துணை ஆளுநர் மருத்துவர் விஜய் முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்ட திட்ட செயலாளர் சசிகுமார் ஃபோம்ரா மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன் ஆகியோர் குளம் தூர் வாரும் திட்டத்தை துவக்கி வைத்தனர். முன்னதாக மேலப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் ரோட்டரி சங்க செயலாளர் ஆட்டோ பிரவீன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
சங்க திட்டம் இயக்குனர் ஜீவா சீனிவாசன், பொருளாளர் முனைவர் முபாரக் அலி, முன்னாள் தலைவர்கள் சையது பாவா பகுருதீன், விகாஸ் டாக்டர் சரவணன், கான் கஃபார்கான், முனைவர் முஜிபுர் ரகுமான், முன்னாள் செயலாளர்கள் கணேசன், இப்ராம்ஷா, மருத்துவர் தமிழ்ச்செல்வன், முன்னாள் பொருளாளர்கள் டீலக்ஸ் கண்ணன், பாப்பாத்தி முருகேசன், மாருதி பழனிவேல், ராஜா, சீனிவாசன், சுரேஷ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற துணை தலைவர் நீதிராஜ், கிராம தலைவர் காமராஜ், பாலையா கனகராஜ், முத்துராமன் , மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 3.5 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் தூர்வாரப்பட்டு விவசாயத்திற்கும், கோவில் நிகழ்வுகளுக்கும், மக்கள் பயன்பாட்டிற்கும் அர்ப்பணிக்கப்பட உள்ளது.
No comments